பகுஜன் சமாஜ் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மாயாவதி (கோப்புப்படம்)
மாயாவதி (கோப்புப்படம்)

வரும் மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை ஞாயிற்றுக்கிழமை அக்கட்சி வெளியிட்டது.

முதல் பட்டியலில், அக்கட்சி முக்கியமாக உத்திரப் பிரதேசத்தின் மேற்கு பகுதியில் இருந்து வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பெரும்பாலான வேட்பாளர்கள் முதல் முறையாக போட்டியிடுபவர்கள். அதன்படி ராம்பூர் தொகுதியில் ஜீஷன் கான், சம்பாலில் ஷவுலத் அலி, அம்ரோஹாவில் முஜாஹித் ஹுசைன், மீரட்டில் தேவ்வ்ரத் தியாகி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மேலும் மஜித் அலி சஹாரன்புரிலும், ஸ்ரீபால் சிங் கைரானாவிலும், தாரா சிங் பிரஜாபதி முசாபர்நகரிலிருந்தும் களமிறக்கப்பட்டுள்ளனர். கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் சமாஜவாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிட்டது. இதில் 10 இடங்களில் வென்று மாநிலத்தில் இரண்டாவது இடத்தை அக்கட்சி பிடித்தது. பாஜக அதிகபட்சமாக 62 தொகுதிகளில் வென்றது.

சமாஜவாதி கட்சி 5 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது.

இதனிடையே வரும் மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடப் போவதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி ஏற்கெனவே அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதில் தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாகவும், உத்திரப் பிரதேச மாநிலத்திற்கு 7 கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com