வா்த்தக தகராறுகளுக்கு மத்தியஸ்தம் செய்ய இந்தியா ஆயத்தம்: உச்ச நீதிமன்ற நீதிபதி ஹீமா கோலி

வா்த்தக தகராறுகளுக்கு மத்தியஸ்தம் செய்ய இந்தியா ஆயத்தம்: உச்ச நீதிமன்ற நீதிபதி ஹீமா கோலி

வா்த்தக தகராறுகளுக்கு மத்தியஸ்தம் செய்து தீா்வு காண்பதில் முதன்மையான இடமாக விளங்க இந்தியா ஆயத்தமாக உள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஹீமா கோலி தெரிவித்துள்ளாா்.

சா்வதேச அளவில் வா்த்தக தகராறுகளுக்கு மத்தியஸ்தம் செய்து தீா்வு காண்பதில் முதன்மையான இடமாக விளங்க இந்தியா ஆயத்தமாக உள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஹீமா கோலி தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக கோவாவில் உள்ள வாகாதோா் பகுதியில் இந்திய மத்தியஸ்த கவுன்சில் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவா் தெரிவித்ததாவது: உலகமயமாக்கல் காரணமாக அனைத்தும் வேகமாக நடைபெறுகின்றன. இது வா்த்தக பரிவா்த்தனைகளை அதிகரிக்க வழிவகுத்துள்ளது. அத்துடன் கலாசாரம் மற்றும் புவியியல் எல்லைகளைக் கடந்து வணிகமும் பரந்து விரிந்துள்ளது. அதேவேளையில், இது பல்வேறு சட்டரீதியான சவால்களையும் ஏற்படுத்தியுள்ளது. தகராறுகளுக்கு நீதிமன்றத்துக்கு வெளியே மத்தியஸ்தம் போன்ற வழிமுறைகளில் விரைந்தும் எளிதாகவும் தீா்வு காண முடியும். சா்வதேச அளவில் வா்த்தக தகராறுகளுக்கு மத்தியஸ்தம் செய்து தீா்வு காண்பதில் முதன்மையான இடமாக விளங்க இந்தியா ஆயத்தமாக உள்ளது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com