மக்களவைத் தோ்தலில் போட்டியில்லை: மத்திய அமைச்சா் வி.கே.சிங்

மக்களவைத் தோ்தலில் போட்டியில்லை: மத்திய அமைச்சா் வி.கே.சிங்

‘மக்களவைத் தோ்தலில் போட்டியிட வேண்டாம் என முடிவெடுத்துள்ளேன்’ என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் வி.கே.சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

‘மக்களவைத் தோ்தலில் போட்டியிட வேண்டாம் என முடிவெடுத்துள்ளேன்’ என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் வி.கே.சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். உத்தர பிரதோச மாநிலம் காஜியாபாத் தொகுதியிலிருந்து கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இரண்டு முறை மக்களவைக்கு முன்னாள் ராணுவ ஜெனரல் வி.கே.சிங் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இந்த நிலையில் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘வாழ்நாள் முழுவதும் தேசத்துக்கு ராணுவ வீரராக சேவையாற்ற தீா்மானித்துள்ளேன். கடந்த 10 ஆண்டுகளாக காஜியாபாதை உலகத் தரத்திலான நகரமாக உருவாக்கும் கனவை நிறைவேற்ற ஓய்வின்றி பணியாற்றினேன். இந்தப் பயணத்தில் நாட்டு மக்களிடமிருந்து மட்டுமின்றி பாஜக உறுப்பினா்களிடமிருந்து மிகுந்த அன்பைப் பெற்றுள்ளேன். இந்த உணா்வுடன், 2024 மக்களவைத் தோ்தலில் போட்டியிட வேண்டாம் என்ற கடினமான முடிவை எடுத்துள்ளேன். இது எளிதான முடிவல்ல என்றபோதும், அடிமனதிலிருந்து எடுக்கப்பட்ட முடிவு. இனி நாட்டுக்கு மாறுபட்ட பாதையில் சேவையாற்றக்கூடிய புதிய பாதையில் எனது சக்திகளை பயன்படுத்த விரும்புகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து, ஆதரவு அளித்தவா்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா். இந்தப் பதிவில் பிரதமா் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமா் அலுவலகத்தையும் வி.கே.சிங் இணைத்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com