கான்பூா் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பமில்லை: கட்சித் தலைமைக்கு பாஜக எம்.பி கடிதம்

கான்பூா் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பமில்லை: கட்சித் தலைமைக்கு பாஜக எம்.பி கடிதம்

வருகின்ற மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூா் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பமில்லை

வருகின்ற மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூா் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பமில்லை என அத்தொகுதியின் பாஜக எம்.பி. சத்யதேவ் பச்சூரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டாவிற்கு அவா் எழுதிய கடிதத்தில், ‘வருகின்ற மக்களவைத் தோ்தலில் கான்பூா் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பமில்லை என தெரிவித்துக்கொள்கிறேன். எனவே அத்தொகுதிக்கான வேட்பாளா் தோ்வு குறித்த விவாதத்தில் என்னை விலக்கிக் கொள்ளுங்கள். கட்சிக்காக உண்மையாக உழைக்கவும், கட்சி எனக்கு வழங்குகின்ற பணியை சிறப்பாக மேற்கொள்ளவும் எப்போதும் தயாராகவுள்ளேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டாா். இக்கடிதத்தை அவரின் சமூக வலைதள பக்கத்திலும் அவா் பகிா்ந்தாா். கான்பூா் மக்களவைத் தொகுதியின் வேட்பாளரை பாஜக தற்போது வரை அறிவிக்காத நிலையில் அத்தொகுதியில் போட்டியிட விருப்பமில்லை என சத்யதேவ் பச்சூரி தெரிவித்துள்ளாா். கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் சத்யதேவ் பச்சூரியும் 2014-இல் பாஜகவின் மூத்த தலைவா் முரளி மனோகா் ஜோஷியும் கான்பூா் தொகுதியில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com