பாஜக வேட்பாளர் கங்கனா குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்து: காங். தலைவர் விளக்கம்

நடிகை கங்கனா ரணாவத் குறித்து காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஸ்ரீநேத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆட்சேபனைக்குரிய கருத்து பதிவாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக வேட்பாளர் கங்கனா குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்து: காங். தலைவர் விளக்கம்

ஹிமாசல பிரதேசத்தின் மண்டி தொகுதி பாஜக வேட்பாளராக நடிகை கங்கனா ரணாவத் அறிவிக்கப்பட்டதை கேலி செய்யும் விதமாக, காங்கிரஸ் சமூக வலைதளப் பிரிவு தலைவர் சுப்ரியா ஸ்ரீநேத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆட்சேபனைக்குரிய கருத்து பதிவாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, தன்னை குறித்த ஆட்சேபனைக்குரிய கருத்து பதிவிட்டிருப்பது குறித்து கங்கனா ரணாவத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, கடந்த 20 ஆண்டுகால திரை வாழ்க்கையில், விலைமாது தொடங்கி, புரட்சித் தலைவி கதாபாத்திரம் வரை, ஒரு நடிகையாக அனைத்து விதமான பெண்கள் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளேன். பெண்களின் உடல் அங்கங்கள் மீதான ஈர்ப்பை கடந்து நாம் எழ வேண்டும். விலைமாது உள்பட ஒவ்வொரு பெண்ணும் மரியாதைக்கு தகுதியானவர் எனக் குறிப்பிடுள்ளார்.

இதையடுத்து, பாஜக தலைவர்கள் ஷேஸாத் பூனவாலா, அமித் மால்வியா ஆகியோர் சுப்ரியா ஸ்ரீநடே மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஸ்ரீநேத் தெரிவித்திருப்பதாவது, ”என்னுடைய முகநூல் மற்றும் இன்ஸ்டா பக்கங்களில் வேறு எவரோ உள்ளீடு செய்து, ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். எனினும், அவை நீக்கப்பட்டுவிட்டன.”

”ஒரு பெண்ணை குறித்து நான் அவ்வாறு பேச மாட்டேன் என்பது என்னை பற்றி அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். என்னுடைய பெயரில் எக்ஸ் தளத்தில் கணக்கு பயன்படுத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com