பிரதமர் மோடிக்கு நன்றி! -பாஜக வேட்பாளர் கங்கனா ரணாவத்

பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டது உணர்ச்சிப்பூர்வமான தருணம் என்று நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு நன்றி! -பாஜக வேட்பாளர் கங்கனா ரணாவத்

மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் 111 போ் அடங்கிய பாஜக வேட்பாளா்களின் 5-ஆவது பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. அக்கட்சி சாா்பில் ஹிமாசல பிரதேசத்தின் மண்டி தொகுதி பாஜக வேட்பாளராக ஹிந்தி திரைப்பட நடிகை கங்கனா ரணாவத் போட்டியிட உள்ளாா்.

பிரதமர் மோடி மற்றும் பாஜக ஆதரவாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நடிகை கங்கனா ரணாவத், பகவான் கிருஷ்ணர் ஆசிர்வதித்தால், அடுத்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என கடந்த ஆண்டு தெரிவித்திருந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் அவருடைய சொந்த மாநிலத்தில் போட்டியிட பாஜக தலைமை அவருக்கு வாய்ப்பளித்துள்ளது.

இந்நிலையில், பாஜகவில் இணைந்த பின் முதன்முறையாக செய்தியாளர்களிடம் இன்று (மார்ச். 25) கங்கனா ரணாவத் பேசினார். மக்களவைத் தோ்தலில் போட்டியிட பாஜக சார்பில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள நடிகை கங்கனா ரணாவத் கூறியதாவது, “ஒவ்வொருவருக்கும் ஹோலி வாழ்த்துக்கள். இதுவே என் ஜென்மபூமி.

பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள், அது எனக்கும் என் குடும்பத்துக்கும் உணர்ச்சிப்பூர்வமான நாள். மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஹிமாசல், மண்டி மக்களுக்காக எந்நேரமும் நான் இருப்பேன், அவர்களுக்கு பணியாற்றுவேன்.

படம் | கங்கனா ரணாவத் எக்ஸ் தளம்

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். அனுராக் தாக்குரும் ஹிமாசல பிரதேச முன்னாள் முதல்வர் ஜெய் ராம் தாக்குரும் எனக்கு பேராதரவு அளித்தனர்.

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பிரதமர் மோடியால் தான் இன்று இந்த பெரும் பொறுப்பு எங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் நன்றி.

உலகில் அதிகம் பேரால் விரும்பப்படும் தலைவர்களுள் பிரதமர் மோடியும் ஒருவர். நாங்கள் அவரின் வழித்தடத்தை பின்பற்றுவோம்.அவரது கொள்கையே எங்களது கொள்கை. பிரதமர் மோடி ஆற்றிய சேவையால் நாங்கள் தேர்தலில் வெற்றி பெறுவோம்.

நான் ஒரு நடிகை என்பதையோ, சூப்பர்ஸ்டார் என்பதையோ நம்பவில்லை. அவற்றையெல்லாம் தியாகம் செய்துவிட்டு, கட்சியின் உத்தரவை பின்பற்றும் சாதாரண தொண்டனாக வந்துள்ளேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

தமிழில் ‘தாம்தூம்’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை கங்கனா ரணாவத், இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவான ‘தலைவி’ திரைப்படத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கதாபாத்திரத்தை ஏற்று நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com