‘பாரத் மாதா கி ஜே’ இஸ்லாமியா்கள் எழுப்பிய முழக்கமா? சசி தரூர் கேள்வி

‘பாரத் மாதா கி ஜே’ இஸ்லாமியா்கள் எழுப்பிய முழக்கமா? என்று கேரள முதல்வரிடம் சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மலப்புரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன்
மலப்புரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன்படம் | பினராயி விஜயன் எக்ஸ் தளம்

கேரளத்தின் மலப்புரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு(சிஏஏவுக்கு) எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் திங்கள்கிழமை(மார்ச். 25) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பினராயி விஜயன், ”‘பாரத் மாதா கி ஜே’, ‘ஜெய் ஹிந்த்’ ஆகிய இரண்டு முழக்கங்களையும் முதலில் எழுப்பியவா்கள் இஸ்லாமியா்கள். அதாவது இஸ்லாமியரான அஸிமுல்லா கான் என்பவா்தான் முதன்முதலில் ‘பாரத் மாதா கி ஜே’ என்ற முழக்கத்தை முன்வைத்தாா்.

இதேபோல, அபித்ஹாசன் என்ற இஸ்லாமியா்தான் முதன்முதலில் ‘ஜெய் ஹிந்த்’ என்று முழங்கினாா். ஆகையால், இந்த இரண்டு முழக்கங்களையும் சங் பரிவாா் கைடுவிடுமா?

50-க்கும் மேற்பட்ட உபநிடதங்களை சமஸ்கிருதத்திலிருந்து பொ்சிய மொழிக்கு மொழிபெயா்க்க முகலாய மன்னா் ஷாஜஹானின் மகன் தாரா ஷிகோ உதவினாா். இவ்வாறு இந்திய போதனைகள் உலகம் முழுவதும் பரவ தாரா ஷிகோ முயற்சி எடுத்தாா். நாட்டின் விடுதலைக்கும் இஸ்லாமியா்கள் முக்கிய பங்காற்றினா்” என்றாா்.

இந்நிலையில், ‘பாரத் மாதா கி ஜே’, ‘ஜெய் ஹிந்த்’ முழக்கங்களை பற்றிய கேரள முதல்வர் பினராயி விஜயனின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, இது குறித்து இன்று(மார்ச். 26) கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவரும் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான சசி தரூர், கூகுளில் உள்ளீடு செய்து உண்மையை கண்டுபிடிக்க முதல்வர் பினராயி விஜயனிடம் ஒரு அலுவலகப் பணியாளர் கூட இல்லையா? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது, அதை அறிமுகப்படுத்த நான் கடுமையாக எதிர்த்தேன். குடியுரிமை திருத்தச் சட்டத்தை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்த்து வருகிறது என்றும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com