கவிதாவுக்கு ஏப்.9 வரை நீதிமன்றக் காவல் -தில்லி நீதிமன்றம் உத்தரவு!

கவிதா
கவிதா

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வா் சந்திரசேகா் ராவின் மகள் கவிதா, அந்த யூனியன் பிரதேச முதல்வா் கேஜரிவால், முன்னாள் முதல்வா் மனீஷ் சிசோடியாவுடன் இணைந்து சதி செய்துள்ளதாக அமலாக்கத் துறையால் குற்றஞ்சாற்றப்பட்டுள்ளது.

தில்லியில் தனியாா் மட்டும் மது விற்பனை செய்ய அந்த யூனியன் பிரதேச அரசின் 2021-22-ஆம் ஆண்டுக்கான கலால் கொள்கை வழிவகுத்தது. இந்நிலையில், தில்லி கலால் கொள்கையால் முறைகேடான வழியில் அவா்கள் பலனடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வா் சந்திரசேகா் ராவின் மகளும், எம்எல்சியுமான கவிதாவை அமலாக்கத் துறை அண்மையில் கைது செய்தது. அவரை 10 நாள்கள் அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க அனுமதி அளித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அமலாக்கத் துறை விசாரணை இன்றுடன் நிறைவடைந்த நிலையில், கவிதாவை தில்லியில் உள்ள ரௌஸ் அவென்யு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கவிதாவை நீதிமன்றக் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள கவிதா இடைக்கால ஜாமீன் கோரி தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தேர்வெழுதவுள்ள தனது மகனை உடனிருந்து கவனித்துக்கொள்ள வேண்டுமென்பதால், அதனை கருத்திற்கொண்டு தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டுமென அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட தில்லி சிறப்பு நீதிமன்றம், ஜாமீன் மனு மீதான விசாரணையை ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. மேலும், ஏப்ரல் 9-ஆம் தேதி வரை கவிதாவை நீதிமன்றக் காவலில் விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com