ராஜஸ்தானில் ரூ.271 கோடி ரொக்கம் பறிமுதல்!

இதுவரை ரூ.271 கோடி மதிப்புள்ள சட்டவிரோத பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ராஜஸ்தானில் ரூ.271 கோடி ரொக்கம் பறிமுதல்!

மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் ராஜஸ்தானில் மார்ச் மாத தொடக்கத்திலிருந்து இதுவரை ரூ.271 கோடி மதிப்புள்ள சட்டவிரோத பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தபிறகு, போதைப்பொருள், மதுபானம், விலைமதிப்பற்ற உலோகங்கள், இலவசங்கள் என இதுவரை ரூ.181 கோடி பொருள்களை கைப்பற்றியுள்ளனர்.

இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குப்தா கூறுகையில், மாநிலத்தில் பல்வேறு ஏஜென்சிகள் சந்தேகத்திற்குரிய பொருள்கள் மற்றும் தேர்தலில் சட்டவிரோதப் பணம் பயன்படுத்துவது குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஜோத்பூர், பாலி, ஜெய்ப்பூர், உதய்பூர், பில்வாரா, கங்காநகர், ஜுன்ஜுனு, அல்வார் மற்றும் பார்மர் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் தலா ரூ.10 கோடிக்கும் அதிகமான பொருள்கள் மற்றும் பணம் மீட்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மாவட்ட வாரியான தரவுகளின்படி, ஜோத்பூரில் அதிகபட்சமாக ரூ.33.36 கோ டி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, பாலியில் சுமார் 19.48 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூரில் ரூ.19.01 கோடி, உதய்பூரில் ரூ.14.19 கோடி, பில்வாராவில் ரூ.14.02 கோடி, கங்காநகரில் ரூ.13.44 கோடி, ஜுன்ஜுனுவில் ரூ.11.87 கோடி, பார்மரில் ரூ.11.17 கோடி, அல்வாரில் ரூ.10.37 கோடி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com