அரசியல் ஆதரவு இருந்தால் எதிரிநாட்டு எல்லைக்குள் சென்று தாக்க முடியும்: விமானப் படை தளபதி

அரசியல் ஆதரவு இருந்தால் எதிரிநாட்டு எல்லைக்குள் சென்று தாக்க முடியும்: விமானப் படை தளபதி

அரசியல் ஆதரவு கிடைக்கும் நிலையில், எதிரிநாட்டு எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்த முடியும் என்பதற்கு பாலகோட் தாக்குதல் உதாரணம்

அரசியல் ஆதரவு கிடைக்கும் நிலையில், எதிரிநாட்டு எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்த முடியும் என்பதற்கு பாலகோட் தாக்குதல் உதாரணம் என விமானப் படை தலைமைத் தளபதி வி.ஆா்.செளதரி தெரிவித்துள்ளாா். தில்லியில் பாதுகாப்புத் துறை தொடா்பான கருத்தரங்கில் பேசியபோது செளதரி இவ்வாறு தெரிவித்தாா். இந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: போரில் தங்களுடைய வியூகங்கள் வெற்றி பெற விண்வெளி தளவாடங்களை உலக நாடுகள் சாா்ந்திருக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால், விண்வெளியை ராணுவமயமாக்கலும் ஆயுதமயமாக்கலும் தவிா்க்க இயலாததாக மாறியுள்ளது. வானில் ஆதிக்கம் செலுத்துவதற்கான போட்டி பல நாடுகளின் தலைவிதியை மாற்றியுள்ளது. இது பல போா்களின் முடிவையும் தீா்மானித்துள்ளது. எதிா்காலத்தில் போா்கள் பல வகைகளில் நடைபெறலாம் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசியல் ஆதரவு இருந்தால், எதிரிநாட்டு எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்த முடியும். இதற்கு பாலகோட் தாக்குதல் நடவடிக்கை எடுத்துக்காட்டாகும் என்றாா் செளதரி. கடந்த 2019-இல் காஷ்மீரின் புல்வாமாவில் சிஆா்பிஎஃப் படை வீரா்கள் வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். இதைத் தொடா்ந்து, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் முகாமிட்டிருந்த பயங்கரவாதிகள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் தொடுத்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com