மதச்சார்பின்மைக்கும் ஜனநாயகத்துக்கும் ஆபத்தை விளைவிக்கிறது மத்திய அரசு: கேரள முதல்வர்

நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்.
கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்திய மதச்சார்பின்மைக்கும், ஜனநாயகத்துக்கும் ஆபத்தை விளைவிப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டில் மதச்சார்பின்மைக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பாஜக தலைமையிலான மத்திய அரசின் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் வாழும் பெரும்பகுதி மக்கள், தொடர்ந்து வாழ முடியுமா? என்ற கவலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் இந்திய மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்பட்டது, மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டிருப்பது குறித்துப் பல நாடுகளும் உலக அமைப்புகளும் சமீபத்தில் இந்தியாவை விமர்சித்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com