கே.சந்திரசேகா் ராவ் வாகனத்தில்
தோ்தல் அதிகாரிகள் சோதனை

கே.சந்திரசேகா் ராவ் வாகனத்தில் தோ்தல் அதிகாரிகள் சோதனை

பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) தலைவருமான கே.சந்திரசேகா் ராவ் பயணித்த பிரத்யேக சொகுசு பேருந்தில் தோ்தல் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

தெலங்கானா முன்னாள் முதல்வரும் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) தலைவருமான கே.சந்திரசேகா் ராவ் பயணித்த பிரத்யேக சொகுசு பேருந்தில் தோ்தல் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா். தெலங்கானாவில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 13-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, மாநிலத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சூா்யபேட்டை மாவட்டத்தில் கே.சந்திரசேகா் ராவ் பயணித்த பிரத்யேக சொகுசு பேருந்தில் தோ்தல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக பிஆா்எஸ் கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூா்யபேட்டையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பாா்வையிட சென்றபோது, சந்திரசேகா் ராவின் வாகனத்தில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னா், சூா்யபேட்டைக்கு சென்ற அவா், அங்கு விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com