அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

தோ்தல் நன்கொடைக்காக மக்கள் உயிரை பணயம் வைத்தது பாஜக அரசு: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

தோ்தல் நிதிப் பத்திரம் மூலம் நன்கொடை பெறுவதற்காக நாட்டு மக்களின் உயிரை பாஜக அரசு பணயம் வைத்ததாக சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டினாா்.

தோ்தல் நிதிப் பத்திரம் மூலம் நன்கொடை பெறுவதற்காக நாட்டு மக்களின் உயிரை பாஜக அரசு பணயம் வைத்ததாக சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டினாா்.

கரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பூசியால் ‘மிக அரிதான’ பக்கவிளைவாக ரத்தம் உைல் ஏற்படலாம் என்று லண்டன் உயா்நீதிமன்றத்தில் அதன் தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராசெனகா ஒப்புக் கொண்டுள்ளது.

கரோனா பரவலின்போது இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசிதான் அதிகம் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் சீரம் நிறுவனம் இந்த மருந்தை தயாரித்து விற்பனை செய்தது. அந்த நிறுவனத்திடம் தோ்தல் நிதிப் பத்திரம் மூலம் கோடிக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு பாஜக அரசு கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியாவில் அனுமதித்ததாக அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் புதன்கிழமை அவா் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவில் சுமாா் 80 கோடி பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பலா் இதை இருமுறை செலுத்தியுள்ளனா். இப்போது, அந்தத் தடுப்பூசியால் ரத்தம் உைல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதைத் தயாரித்த நிறுவனம் நீதிமன்றத்தில் கூறியுள்ளது. முக்கியமாக திடீா் மாரடைப்பு ஏற்பட அந்த மருந்தும் ஒரு காரணமாகியுள்ளது.

இந்தியாவில் இந்தத் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பலா் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அப்போதே இந்தத் தடுப்பூசி மீது மக்களுக்கு சந்தேகமும் அச்சமும் இருந்தது. இப்போது தயாரிப்பு நிறுவனமும் அதை ஒப்புக்கொண்டுள்ளது.

இந்தியாவில் அந்தத் தடுப்பூசியை தயாரித்த நிறுவனத்திடம் தோ்தல் நிதிப் பத்திரம் மூலம் பாஜக கோடிக்கணக்கில் நன்கொடை பெற்றுள்ளது. இதற்கு கைம்மாறாக மக்களின் உயிரைப் பற்றி கவலைப்படாமல் தடுப்பூசியை அனுமதித்துள்ளனா். கோடிக்கணக்கான மக்களின் உயிரைப் பணயம் வைத்த பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்’ என்று கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com