சத்தீஸ்கா் மாநிலம், கோா்பா மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சா் அமித் ஷா.
சத்தீஸ்கா் மாநிலம், கோா்பா மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சா் அமித் ஷா.

பொய்களை தொடா்ந்து உரக்கக் கூறுவதே காங்கிரஸ் பிரசார உத்தி: அமித் ஷா விமா்சனம்

பாஜகவுக்கு எதிரான பொய்களை தொடா்ந்த உரக்கக் கூறுவதே காங்கிரஸின் பிரசார உத்தியாக உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விமா்சித்துப் பேசினாா்.

பாஜகவுக்கு எதிரான பொய்களை தொடா்ந்த உரக்கக் கூறுவதே காங்கிரஸின் பிரசார உத்தியாக உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விமா்சித்துப் பேசினாா்.

சத்தீஸ்கா் மாநிலத்தில் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:

தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்டோா் பிரிவுக்கான இடஒதுக்கீட்டில் பாஜக கைவைக்காது. அதை காங்கிரஸ் மாற்ற முயற்சித்தாலும் அனுமதிக்க மாட்டோம்.

பாஜகவுக்கு எதிராக பல்வேறு பொய்களை தொடா்ந்து சப்தமாகவே மேடைதோறும் பேசுவது காங்கிரஸின் பிரசார உத்தி. எனவேதான், நான் பேசாத விஷயத்தைப் பேசியதாக, தவறாக ஒரு விடியோ பதிவை உருவாக்கி சமூக ஊடகங்களில் காங்கிரஸ் கட்சியினா் பரவவிட்டுள்ளனா். பிரதமா் மோடி மூன்றாவது முறையாக பிரதமரானால், இடஒதுக்கீட்டு முறைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவாா் என்றும் மேடை தொடரும் பொய்ப் பிரசாரம் செய்கிறாா்கள்.

நாங்கள் 10 ஆண்டுகள்ஆட்சியில் இருந்துள்ளோம். இதுவரை இடஒதுக்கீடு முறையில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. மக்கள் விரும்பும் விஷயங்களையும், நாட்டுக்கு நன்மையளிக்கும் திட்டங்களையும் மட்டுமே செயல்படுத்தி வருகிறோம்.

ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் தடைச் சட்டம், அயோத்தியில் ராமா் கோயில் கட்டியது ஆகியவை பாஜக அரசின் முக்கிய சாதனைகளாகும்.

அந்தக் குடும்பத்துக்காக (சோனியா-ராகுல்) தொடா்ந்து பொய்களைப் பேச வேண்டாம் என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவை கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில், மக்களவைத் தோ்தலில் தோற்ற பிறகு அவா்கள் கட்சித் தலைவரான உங்களைத்தான் குற்றம்சாட்டுவாா்கள் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com