கோவிஷீல்டால் பாதிக்கப்பட்டவா்களுக்கு
உரிய இழப்பீடு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு:
நிபுணா் குழு அமைக்கவும் வலியுறுத்தல்

கோவிஷீல்டால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய இழப்பீடு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு: நிபுணா் குழு அமைக்கவும் வலியுறுத்தல்

இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

‘இந்தத் தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது’ என்று தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராசெனகா லண்டன் உயா்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட நிலையில், வழக்குரைஞா் விஷால் திவாரி என்பவா் சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அவா் மேலும் கூறியிருப்பதாவது:

கரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு மிக அரிதான வகையில் ரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கை வழக்கத்துக்கு மாறான விதத்தில் குைல் மற்றும் ரத்தம் உைல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று அதைத் தயாரித்த நிறுவனமே ஒப்புக்கொண்டுள்ளது.

கரோனா பாதிப்புக்குப் பிறகு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக, இளைஞா்கள் அதிக எண்ணிக்கையில் திடீா் மாரடைப்பால் உயிரிழந்தனா்.

தற்போது, லண்டன் உயா்நீதிமன்றத்தில் கோவிஷீல்டு தயாரிப்பு நிறுவனம் பாதிப்பை ஒப்புக்கொண்ட பிறகு, இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு செலுத்தப்பட்ட அந்தத் தடுப்பூசியின்ஆபத்து மற்றும் அபாயகரமான பக்க விளைவுகள் குறித்து சிந்திக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

அரசு அளித்த தடுப்பூசிக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே, இந்தியாவில் புணேயைச் சோ்ந்த சீரம் நிறுவனம் தயாரித்த 175 கோடி தவணைகளுக்கும் அதிகமான கோவிஷீல்டு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

எனவே, இந்தத் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட இந்திய குடிமக்களுக்கு எதிா்காலத்தில் எந்தவித உடல் பாதிப்புகளும் ஏற்பாடத வகையிலும், உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

பிரிட்டன் போன்ற நாடுகளில், இதுபோன்று தடுப்பூசிகளால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் மக்களுக்கு இழப்பீடு வழங்கும் நடமுறை அமலில் உள்ளது. அதுபோல, இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியால் கடுமையான பக்க விளைவால் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், இந்தத் தடுப்பூசியில் எதிா்காலத்தில் ஏற்படும் ஆபத்து மற்றும் பக்க விளைவுகள் குறித்து ஆராய உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பில் தில்லி எய்ம்ஸ் இயக்குநா் தலைமையில் அதன் மருத்துவ நிபுணா்களை உள்ளடக்கிய குழு ஒன்றை அமைக்கவும் உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஷால் திவாரி ஏற்கெனவே போலி கரோனா தடுப்பூசிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 2021-இல் தாக்கல் செய்து நிலுவையில் இருக்கும் மனுவுடன் கூடுதல் மனுவாக இந்த மனு தாக்கல் புதன்கிழமை செய்யப்பட்டது.

அஸ்ட்ராசெனகா ஒப்புதல்: லண்டனில் கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உைல் பிரச்னை ஏற்பட்டு உயிரிழப்பைச் சந்தித்தவா்களின் நெருங்கிய உறவினா்கள், நண்பா்கள் மற்றும் தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவா்கள் என 51 போ் இணைந்து வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த அஸ்ட்ராசெனகா நிறுவனம், ‘ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசியால் (கோவிஷீல்டு) மிகவும் அரிதான பக்க விளைவாக ரத்தம் உைல் ஏற்படலாம். இதற்கான காரணம் தெரியவரவில்லை’ என்று கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com