நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

நிலவின் தென்துருவப் பகுதிகளை விட வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பதாக இஸ்ரோ ஆய்வில் தகவல்
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

சந்திரயான் 3 அனுப்பிய தகவல்களை ஆராய்ச்சி செய்ததில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறு இருப்பது உறுதியாகியுள்ளது.

இஸ்ரோவின் ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டர் பிரிவு, ஐஐடி கான்பூர், ஐஐடி தான்பாத், கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் இணைந்து நடத்திய ஆய்வில், நிலவின் தென்துருவப் பகுதிகளை விட வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவின் மேற்பரப்பிலிருந்து ஒரு சில அடி ஆழத்தில் இருக்கும் பனிக்கட்டிகள், துருவப் பகுதிகளில் இருக்கும் பனிகட்டிகளை விட 5 - 8 மடங்கு பெரியளவில் உள்ளதாகவும், ஆகவே, தென் துருவப் பகுதி மேற்பரப்பை ஆழ்துளையிட்டு அவற்றை ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரயான் 4 திட்டத்தில் தென் துருவத்தில் தரைப் பகுதியை துளையிட்டு ஆராய்ச்சி செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

நிலவின் வட துருவப் பகுதிகளில், தென் துருவப் பகுதிகளில் இருப்பதை விட இருமடங்கு அதிகளவிலான நீர், பனிக்கட்டிகளாக உறைந்த நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவின் தென் துருவப் பகுதிகளில் சுமார் 38,000 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட வாயுக்கள் வெளியேற்றம், இந்த பனிக்கட்டிகள் உருவாக முக்கிய காரணமாக இருக்கலாம் என்று உறுதி செய்யப்படாத அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனையே இஸ்ரோவின் தற்போதைய ஆய்வு முடிவுகள் வெளிக்காட்டுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com