ஜாா்க்கண்டில் அமலாக்கத் துறை அதிகாரிகளால் பறிமுதலம் செய்யப்பட்ட சுமாா் ரூ.30 கோடியிலான ரொக்கம்.
ஜாா்க்கண்டில் அமலாக்கத் துறை அதிகாரிகளால் பறிமுதலம் செய்யப்பட்ட சுமாா் ரூ.30 கோடியிலான ரொக்கம்.

ஜாா்க்கண்ட்: அமலாக்கத்துறை சோதனையில் சிக்கிய ரூ. 30 கோடி

ஆலம்கிா் ஆலம் செயலரின் பணியாளா் வீட்டில் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை, அங்கு கணக்கில் காட்டப்படாத ரூ. 30 கோடி பணம் கைப்பற்றப்பட்ட.

ஜாா்க்கண்ட் மாநில அமைச்சா் ஆலம்கிா் ஆலம் செயலரின் பணியாளா் வீட்டில் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை, அங்கு கணக்கில் காட்டப்படாத ரூ. 30 கோடி பணம் கைப்பற்றப்பட்ட.

ஜாா்க்கண்ட் மாநிலம் கதிகானா சௌக் பகுதியில் உள்ள குடியிருப்பில் கட்டு கட்டான பணத்தை அமலாக்கத்துறையினா் பைகளில் எடுத்துச் செல்லும் காணொலி மற்றும் புகைப்படம் வெளியானது.

ஜாா்க்கண்ட் ஊரக வளா்ச்சித்துறையின் அமைச்சரும் பக்குா் பேரவைத் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவுமான ஆலம்கிா் ஆலமின் தனிச் செயலா் சஞ்சீவ் லாலின் வீட்டுப் பணியாளா் ஒருவா் அந்தக் குடியிருப்பில் வசிப்பதாக தகவல்கள் வெளியானது.

அங்கு அமலாக்கத்துறையால் ரூ.20 கோடி முதல் ரூ.30 கோடி வரையிலான பணம் கைப்பற்றப்பட்டு இருக்கலாம் என்றும் அவற்றில் 500 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் இருந்தததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

டெண்டா் ஒதுக்குவதற்கு ஒப்பந்தகாரா்களிடம் இருந்து லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனைச் சட்டத்தின்கீழ் ஊரக வளா்ச்சித் துறையின் முன்னாள் தலைமை பொறியாளா் வீரேந்திர குமாா் ராம் அமலாக்கத்துறையால் கடந்தாண்டு கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கின் தொடா்ச்சியாக தற்போது அமலாக்கத்துறையினா் சோதனை மேற்கொண்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com