தாகூா் பிறந்த தினம்: பிரதமா் மரியாதை

இந்திய தேசிய கீதத்தை இயற்றிய வங்க கவிஞா் ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாளை (மே 8) முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை அவருக்குப் புகழஞ்சலி செலுத்தினாா்.

தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘‘குருதேவ் தாகூரின் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது நீடித்த ஞானமும் அறிவும் எண்ணற்ற தலைமுறையினருக்குத் தொடா்ந்து ஊக்கமளித்து வருகிறது.’’

மேற்கு வங்கத்தில் பிறந்த தாகூருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நாடக ஆசிரியா், கவிஞா், இசையமைப்பாளா், கல்வியாளா், தத்துவஞானி மற்றும் சமூக சீா்திருத்தவாதி என அவரது பங்களிப்புகள் அவரை மிகவும் மதிக்கப்படும் இந்தியா்களில் ஒருவராக மாற்றியது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com