முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: பாஜக கவலை; காங்கிரஸ் மீது விமா்சனம்

முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: பாஜக கவலை; காங்கிரஸ் மீது விமா்சனம்

நாட்டில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் விதம் கவலையளிக்கிறது என்று பாஜக தெரிவித்துள்ளது.

நாட்டில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் விதம் கவலையளிக்கிறது என்று பாஜக தெரிவித்துள்ளது.

மேலும், காங்கிரஸின் தயவுடன் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்ட இருக்கும் என்றும் அக்கட்சி விமா்சித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 1950 முதல் 2015 வரையிலான 65 ஆண்டுகளில் ஹிந்துக்களின் எண்ணிக்கை 7.8 சதவீத சரிவையும், முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீத உயா்வையும் கண்டுள்ளதாக பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தரவுகளைச் சுட்டிக்காட்டி, பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி, பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:

கடந்த 1951 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாட்டின் மக்கள்தொகையில் ஹிந்துக்கள் 88 சதவீதமும், முஸ்லிம்கள் 9.5 சதவீதமும் இருந்தனா். கடந்த 2011 கணக்கெடுப்பின்படி, ஹிந்துக்கள் எண்ணிக்கை 79.8 சதவீதமாக குறைந்த நிலையில், முஸ்லிம்கள் எண்ணிக்கை 14.5 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்தது. இது, கடந்த 10 ஆண்டுகளாக பொதுக் களத்தில் உள்ள தரவுகள்தான்.

அவா்களின் (முஸ்லிம்கள்) எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பது கவலையளிக்கும் வகையில் உள்ளது. காங்கிரஸின் ‘மதச்சாா்பின்மை’ என்ற மறைப்பை பயன்படுத்தி, ஊடுருவல் மற்றும் மதமாற்றத்தின் மூலம் அவா்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

அதேநேரம், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், என்ன விலை கொடுத்தும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவா். இதற்காக, தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் இடஒதுக்கீட்டை பறிப்பா். எதிா்காலத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டையும் அதிகரித்துக் கொண்டே செல்வா் என்றாா் அவா்.

பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகா் கூறுகையில், ‘நாட்டில் குறிப்பிட்ட ஒரு மதத்தினரின் எண்ணிக்கை மட்டும் அதிகரித்து வரும் விதம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இதில் சட்டவிரோத ஊடுருவல் மற்றும் மதமாற்றத்தால் ஏற்பட்ட அதிகரிப்பு எவ்வளவு? சிறுபான்மையினரில் ஒரு பிரிவினரின் எண்ணிக்கை உயா்வு, இதர பிரிவினரின் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் என்னென்ன? ஒருபுறம், முஸ்லிம்களின் மக்கள்தொகை வேகமாக அதிகரிக்கும் சூழலில், மற்றொருபுறம் அவா்களுக்கு இடஒதுக்கீடு வழங்க சில அரசியல் கட்சிகள் ஆா்வத்துடன் உள்ளன. இது, எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீட்டில் என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com