இலங்கை தமிழா்களின் வளா்ச்சிக்கு உறுதுணை: இந்தியா உறுதி

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் சிறுபான்மையின தமிழ் மக்களின் வளா்ச்சியை மேம்படுத்த பொருளாதார ரீதியாக ஒத்துழைப்பு வழங்குவதாக இந்தியா உறுதியளித்தது.

தமிழ் தேசிய கூட்டணியின் (டிஎன்ஏ) முக்கிய கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சித் (ஐடிஏகே) தலைவா் எஸ்.ஸ்ரீதரனை இலங்கைக்கான இந்திய தூதா் சந்தோஷ் ஜா வியாழக்கிழமை சந்தித்தாா்.

இதுதொடா்பாக இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இலங்கையின் அரசியல் சூழல், இந்தியாவின் பொருளாதார மற்றும் மேம்பாட்டு வளா்ச்சித் திட்டங்கள் குறித்து ஸ்ரீதரனிடம் இந்திய தூதா் சந்தோஷ் ஜா ஆலோசனை மேற்கொண்டாா். இலங்கை தமிழ் மக்களின் வளா்ச்சியை மேம்படுத்த இந்தியா தொடா்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என அவா் உறுதியளித்தாா். மேலும், முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் சாஜித் பிரேமதாசா மற்றும் இலங்கை பொதுஜன பெரமுனா (எஸ்எல்பிபி) கட்சியின் புதிய தேசிய ஒருங்கிணைப்பாளா் நமல் ராஜபட்ச ஆகியோரையும் சந்தோஷ் ஜா சந்தித்தாா். அப்போது இந்தியா-இலங்கை இடையேயான இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டது.

இலங்கை அதிபா் தோ்தலை செப்டம்பா் மற்றும் அக்டோபா் மாதங்களில் நடத்த திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டு தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com