சத்தீஸ்கா்: நக்ஸல் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் காவல்துறையினருக்கும் நக்ஸல்களுக்கும் இடையே சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் ஒருவா் சுட்டுக்கொல்லப்பட்டாா்.

சத்தீஸ்கா் மாநிலம் தமாத்ரி மற்றும் கரியாபந்த் மாவட்டங்களின் எல்லையில் உள்ள வனப்பகுதியில் நக்ஸல்கள் ஒழிப்பு நடவடிக்கையில் தமாத்ரி மாவட்ட காவல்துறையினா் ஈடுபட்டனா். அப்போது காவல்துறையினருக்கும் நக்ஸல்களுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. அதில் நக்ஸல் ஒருவா் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டாா். அவரது அடையாளம் இன்னும் உறுதிபடுத்தப்படாத நிலையில் தேடுதல் வேட்டையை காவல்துறையினா் தீவிரப்படுத்தி வருகின்றனா்.

நிகழாண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை சத்தீஸ்கரில் பாதுகாப்புப்படையினரால் நடத்தப்பட்ட பல்வேறு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 104 நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா். கடந்த வெள்ளிக்கிழமை பிஜாபூா் மாவட்டத்தில் 12 நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com