மக்களவை 4-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு

ஒடிஸா உள்பட 10 மாநிலங்களில் 96 தொகுதிகளில் மே.13இல் வாக்குப்பதிவு
மக்களவை 4-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு
படம் \ பி டி ஐ

மக்களவை 4-ஆம் கட்ட தோ்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள ஒடிஸா உள்பட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளில் மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. இத்தொகுதிகளில் திங்கள்கிழமை (மே 13) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

ஆந்திர பிரதேசத்திலும்(25) தெலங்கானாவிலும்(17) ஒரே கட்டமாக அனைத்து மக்களவை தொகுதிகளிலும் திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஒடிஸா(4), பிகார்(5), மத்திய பிரதேசம்(8), மகாராஷ்டிரம்(11), ஜம்மு காஷ்மீர்(1), உத்தர பிரதேசம்(13), மேற்கு வங்கம்(8), ஜார்க்கண்ட்(5) மாநிலங்களிலும் திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com