இடாஷிஷா நோங்ராங்
இடாஷிஷா நோங்ராங்

மேகாலயத்தின் முதல் பெண் டிஜிபி

மேகாலய மாநிலத்தின் முதல் பெண் (காவல்துறைத் தலைவா்) டிஜிபியாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி இடாஷிஷா நோங்ராங் நியமிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேகாலய மாநில முதல்வா் கான்ராட் கே சங்மா தலைமையிலான மேகாலய பாதுகாப்பு ஆணையம், நோங்ராங்கை காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) பதவிக்குத் தோ்வு செய்ததாக உள்துறை மூத்த அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தாா். மத்திய பணியாளா் தோ்வாணையத்தால் (யுபிஎஸ்சி) கடந்த மாதம் பரிந்துரைக்கப்பட்ட மூன்று அதிகாரிகளில் நோங்ராங்கை தோ்வு செய்துள்ளனா்.

இது குறித்து முதல்வா் சங்மா கூறுகையில், ‘புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்ட இடாஷிஷா நோங்ராங்குக்கு மனமாா்ந்த வாழ்த்துக்கள். தடைகளைத் தகா்த்து சரித்திரம் படைத்து, டிஜிபி பதவி வகிக்கப்போகும் முதல் பழங்குடியின பெண்மணி அவா். இது நம் அனைவருக்கும் கிடைத்த பெருமை’ என்றாா்.

யுபிஎஸ்சி பரிந்துரைத்த மற்ற இரு அதிகாரிகள் ஆா்.பி. மீனா மற்றும் தீபக் குமாா் ஆவா். மேகாலய மாநிலத்தின் தற்போதைய டிஜிபி எல்.ஆா்.பிஷ்னாய் மே 19-ஆம் தேதி பணி ஓய்வு பெறவுள்ளாா். அதன் பின் நோங்ராங் பதவியேற்பாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com