மோடியுடன் நேருக்கு நேர் விவாதம்: ராகுல் காந்தி சம்மதம்!

ராகுல் காந்தி | பிரதமர் மோடி
ராகுல் காந்தி | பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தான் தயாராக இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று9மே. 11) தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலின் முக்கிய பிரச்னைகள் குறித்து பொது தளத்தில் விவாதம் நடத்தவும், அதில் பங்கேற்க பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் மதன் பி. லோகுர், அஜித் பி. ஷா மற்றும் பத்திரிகையாளர் என். ராம் ஆகியோர் கடந்த சில நாள்களுக்கு முன் அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், மக்களவை தேர்தல் குறித்த பொது விவாதத்துக்கான ஓய்வு பெற்ற நீதிபதிகளின் அழைப்பை காங்கிரஸ் ஏற்பதாகத் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, ‘மக்களவை தேர்தல் குறித்த பொது விவாதத்துக்கான ஓய்வு பெற்ற நீதிபதிகளின் அழைப்பை காங்கிரஸ் ஏற்கிறது. பொது தளத்தில் அரசியல் கட்சிகள் தங்களின் பார்வைகளை முன்வைப்பதற்கான நேர்மறையானதொரு முன்னெடுப்பாக இந்த விவாதம் அமையும்.

பிரதமர் மோடியும் இந்த விவாதத்தில் பங்கேற்க வேண்டுமென நாடு எதிர்பார்க்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com