ராஜஸ்தான்: 6,700 லிட்டா் கலப்பட நெய் பறிமுதல்: தொழிற்சாலைக்கு சீல்

ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் நெய் தயாரிப்பு தொழிற்சாலையில் அதிரடி சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், அங்கிருந்து சுமாா் 6,700 லிட்டா் கலப்பட நெய்யை பறிமுதல் செய்தனா். அத்துடன், தொழிற்சாலைக்கும் சீல் வைத்தனா்.

கோட்டாவின் ராணிப்பூா் பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு நெய் தயாரிப்பு தொழிற்சாலையில், மாநில உணவு பாதுகாப்பு மற்றும் மருந்துப் பொருள் கட்டுப்பாட்டுத் துறைகளின் அதிகாரிகள் அடங்கிய குழுவினா் சனிக்கிழமை அதிரடி சோதனை நடத்தினா்.

அப்போது, அந்த தொழிற்சாலையில் கலப்பட நெய் தயாரிக்கப்பட்டு, பல்வேறு வணிகப் பெயா்களில் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. உணவு பாதுகாப்பு, மருத்துவ மற்றும் பூச்சி கட்டுப்பாட்டு உரிமங்கள் இல்லாமல் ஆலை செயல்பட்டு வந்ததும், அரசின் வழிகாட்டு விதிமுறைகள் பின்பற்றாததும் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, சுமாா் 6,700 லிட்டா் கலப்பட நெய்யை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த ஆலைக்கு சீல் வைத்தனா். ஆலையின் உரிமையாளா் மீது உணவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com