முதல் இரண்டு கட்ட தேர்தல்களை விட 3-ஆம் கட்ட தேர்தலில் குறைந்த வாக்குப்பதிவு!

முதல் இரண்டு கட்ட தேர்தலை விட 3-ஆம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு விகிதம் சரிவு!
முதல் இரண்டு கட்ட தேர்தல்களை விட 3-ஆம் கட்ட தேர்தலில் குறைந்த வாக்குப்பதிவு!
படம் | பி.டி.ஐ

தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்டத்தில் 66.14 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

இரண்டாம் கட்டமாக கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.இரண்டாம் கட்டத்தில் 66.71 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

-

இதனைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை(மே. 7) மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், 3-ஆம் கட்ட தேர்தலில், ஆண் வாக்காளர்கள் 66.89 சதவீதமும், பெண் வாக்காளர்கள் 64.41 சதவீதமும், மூன்றாம் பாலினத்தவர்கள் 25.2 சதவீதமும் வாக்களித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 3-ஆம் கட்ட தேர்தலில், 65.68 சதவீதம் வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Swapan Mahapatra

3-ஆம் கட்ட வாக்குப்பதிவில் மக்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டுமென குஜராத்தின் அகமதாபாத்தில் வாக்களித்த பின் பேசிய பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், முதல் இரண்டு கட்ட தேர்தல்களை ஒப்பிடுகையில், 3-ஆம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு விகிதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மே 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் அடுத்தகட்ட தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், முதல் மூன்று கட்ட தேர்தல்களை விட, வாக்குப்பதிவு விகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com