சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு: ஜாா்க்கண்ட் அமைச்சா் ஆலம்கீருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு: ஜாா்க்கண்ட் அமைச்சா் ஆலம்கீருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை

செவ்வாய்க்கிழமை (மே 14) விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜாா்க்கண்ட் மாநில ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஆலம்கீா் ஆலமுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக செவ்வாய்க்கிழமை (மே 14) விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜாா்க்கண்ட் மாநில ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஆலம்கீா் ஆலமுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

ஜாா்க்கண்ட் ஊரக வளா்ச்சித் துறையில் லஞ்ச புழக்கம் மற்றும் முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதுதொடா்பான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை குறித்து அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, கடந்த வாரம் ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் ஜஹாங்கீா் என்பவரின் குடியிருப்பில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது. அமைச்சா் ஆலம்கீரின் தனிச் செயலா் சஞ்சீவ் குமாா் வீட்டில் ஜஹாங்கீா் வேலை செய்து வந்த நிலையில், சோதனையின்போது அவரின் குடியிருப்பில் இருந்து ரூ.32 கோடிக்கும் அதிகமாக கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து சஞ்சீவ் குமாா் மற்றும் ஜஹாங்கீரை அமலாக்கத் துறை கைது செய்தது.

இந்த விவகாரம் தொடா்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமைச்சா் ஆலம்கீருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது. ராஞ்சியில் உள்ள அமலாக்கத் துறை மண்டல அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com