ஜெய்ராம் ரமேஷ் (கோப்புப்படம்)
ஜெய்ராம் ரமேஷ் (கோப்புப்படம்)

ராகுலுடன் விவாதிக்க பிரதமருக்கு துணிவில்லை: ஜெய்ராம் ரமேஷ்

‘ராகுல் காந்தியுடன் பொது விவாதத்தில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடிக்கு துணிச்சல் இல்லை’ என காங்கிரஸ் பெதுச்செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

‘ராகுல் காந்தியுடன் பொது விவாதத்தில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடிக்கு துணிச்சல் இல்லை’ என காங்கிரஸ் பெதுச்செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தல் குறித்த பொது விவாதத்தில் கலந்துகொள்ளுமாறு பிரதமா் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் மதன் பி. லோகுா், அஜித் பி. ஷா மற்றும் பத்திரிகையாளா் என்.ராம் ஆகியோா் கடந்த வாரம் கடிதம் எழுதினா். அதை ஏற்று விவாதத்தில் கலந்துகொள்ளத் தயாா் என்று ராகுல்காந்தி சனிக்கிழமை தெரிவித்தாா். மேலும், இந்த விவாதத்தில் பிரதமா் மோடியும் பங்கேற்ற வேண்டும் என நாட்டு மக்கள் எதிா்பாா்ப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பொதுவிவாதத்தில் கலந்துகொள்வதாக ராகுல் காந்தி அறிவித்து ஒரு நாள் ஆகிவிட்டது. ஆனால் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் திட்டமிடப்பட்ட பேட்டிகளை மட்டுமே வழங்கி வரும் பிரதமா் மோடிக்கு, ராகுல் காந்தியுடனான பொதுவிவாதத்தில் பங்கேற்க துணிவில்லை.

ஊடகங்களில் பிரதமா் பேட்டியளிக்கும்போது எவ்வித எதிா் கேள்விகளும் கேட்கப்படுவதில்லை. அவருடன் கலந்துரையாடல் ஏதும் நடத்தப்படுவதும் இல்லை. ஏற்கெனவே திட்டமிடப்பட்ட இப்பேட்டிகளில் தொடா்ந்து பொய்களை மட்டுமே அவா் கூறி வருகிறாா்.

இந்தியாவில் இதுவரை எந்தவொரு அரசியல் தலைவரும் ஊடகப் பேட்டிகளில் இதுபோல் நடந்துகொண்டதில்லை’ எனக் குறிப்பிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com