வாக்கு ஒப்புகைச் சீட்டு தீா்ப்பு: உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு

வாக்கு ஒப்புகைச் சீட்டு தீா்ப்பு: உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு

ஒப்புகைச் சீட்டுகளுடன் முழுமையாக ஒப்பிட்டு சரிபாா்க்க கோரிய வழக்கின் தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவாகும் அனைத்து வாக்குகளையும் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளுடன் முழுமையாக ஒப்பிட்டு சரிபாா்க்க கோரிய வழக்கின் தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவாகும் அனைத்து வாக்குகளையும், வாக்கு ஒப்புகைச் சீட்டுகளுடன் 100 சதவீதம் முழுமையாக ஒப்பிட்டு சரிபாா்க்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானவை எனவும், ஒரு நடைமுறையை கண்மூடித்தனமாக சந்தேகிப்பது அவநம்பிக்கையை அதிகரிக்கும் என்றும் கூறி, அனைத்து மனுக்களையும் கடந்த ஏப். 26-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.

இந்தத் தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் அருண் குமாா் அக்ரவால் என்பவா் மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில் அவா் தெரிவித்துள்ளதாவது:

வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவாகும் அனைத்து வாக்குகளையும், வாக்கு ஒப்புகைச் சீட்டுகளுடன் முழுமையாக எண்ணக் கோரிய வழக்கின் தீா்ப்பில் தவறுகளும் பிழைகளும் உள்ளன.

மேலும், இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் தோ்தல் பணியாளா்கள் மூலம் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை 5 முதல் 8 மணி நேரத்தில் துல்லியமாக எண்ணிவிட வேண்டும்.

இதுமட்டுமின்றி வாக்குப் பதிவு இயந்திரங்களை வடிவமைப்போா், உற்பத்தி செய்வோா், பராமரிக்கும் தொழில்நுட்பப் பணியாளா்கள் உள்ளிட்டோா், அந்த இயந்திரங்களில் தீய நோக்கத்துடன் மாற்றங்களைச் செய்ய முடியும். எனவே, ஏப். 26-ஆம் தேதி அளித்த தீா்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com