குருத்வாராவில் பக்தர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி!

குருத்வாராவில் பக்தர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி!

குருத்வாராவில் வழிபாடு மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள பக்தர்களுக்கு உணவு பரிமாறினார்.

பாட்னா சாஹிப் குருத்வாராவில் வழிபாடு மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள பக்தர்களுக்கு உணவு பரிமாறினார்.

புகழ்பெற்ற சீக்கியர்களின் புனிதத் தலமாக ஸ்ரீ தக்த் ஹர்மந்திர் பாட்னா சாஹிப் குருத்வாரா கருதப்படுகிறது. 10வது சீக்கிய குரு பிறந்த இடத்தில் பாட்னா சாஹிப் குருத்வாரா அமைந்துள்ளது. குரு கோவிந்த் சிங்கின் பிறந்த இடத்தைக் குறிக்கும் வகையில் 19ஆம் நூற்றாண்டில் மகாராஜா ரஞ்சித் சிங் என்பவரால் தகாத்தின் கட்டுமானம் அமைக்கப்பட்டது.

குருத்வாராவில் பக்தர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி!
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு: சென்னையில் 98.47% தேர்ச்சி!

மக்களவைத் தேர்தல் மும்மரமாக நடைபெற்றுவரும் நிலையில், இதுவரை மூன்று கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில், 4-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி பிகாருக்குச் சென்றுள்ளார்.

குருத்வாராவுக்குச் சென்ற பிரதமர் மோடி சீக்கிய தலைப்பாகையை அணிந்து, அங்குள்ள பக்தர்களுக்கு உணவு பரிமாறினார். காலை உணவு தயார் செய்யும் சமையல் அறைக்குச் சென்று அங்கு சாப்பாத்தி திரட்டி, சமையல் செய்பவர்களுக்கு பிரதமர் மோடி உதவினார்.

பிரதமர் மோடி பக்தர்களுக்கு உணவு பரிமாறும் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட நிலையில், பல்வேறு தரப்பினரும் பிரதமர் மோடியைப் பாராட்டி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com