சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு: சென்னையில் 98.47% தேர்ச்சி!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு: சென்னையில் 98.47% தேர்ச்சி!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் நடத்தப்படும் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதிய மாணவ, மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் பலத்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இன்று காலை 11 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

பனிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2ஆம் தேதி முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் தேர்வு பனிரெண்டாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிட்டுள்ளது.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சென்னை மண்டலத்தில் 98.47 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.91 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

விஜயவாடா மண்டலம் 99.04 சதவீதம் பெற்று இரண்டாமிடத்தையும், பிரயாக்ராஜ் 78.25 சதவீதம் பெற்று கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com