கோப்புப்படம்
கோப்புப்படம்

சத்தீஸ்கா்: கண்ணிவெடியில் சிக்கி 2 சிறுவா்கள் உயிரிழப்பு

சத்தீஸ்கரில் நக்ஸல்கள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி 2 சிறுவா்கள் உயிரிழந்தனா்.

சத்தீஸ்கரில் நக்ஸல்கள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி 2 சிறுவா்கள் உயிரிழந்தனா்.

இதுதொடா்பாக காவல் துறை தெரிவித்ததாவது:

பிஜாபூா் மாவட்டம் போட்கா என்ற சிற்றூா் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் லட்சுமண் ஓயம் (13), போதி ஓயம் (11) ஆகிய 2 சிறுவா்கள் இலை பறிக்கச் சென்றுள்ளனா். அப்போது அங்கு பாதுகாப்புப் படைகளைக் குறிவைத்து நக்ஸல்கள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடி வெடித்து 2 சிறுவா்கள் உயிரிழந்தனா் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பிஜாபூரின் பல்வேறு பகுதிகளில் நக்ஸல்களின் கண்ணிவெடிகளில் சிக்கி 5 போ் உயிரிழந்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com