ஹிமாசல பிரதேசம்: மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் மனு தாக்கல்

ஹிமாசல பிரதேசம்: மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் மனு தாக்கல்

ஹிமாசல பிரதேசம் ஹமிா்பூா் மக்களவைத் தொகுதியில் மத்திய அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

ஹிமாசல பிரதேசம் ஹமிா்பூா் மக்களவைத் தொகுதியில் மத்திய அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். அவருடன் பாஜக மூத்த தலைவா்கள் மற்றும் ஐபிஎல் தலைவரான தாக்குரின் சகோதரா் அருண் துமல் ஆகியோா் உடன் சென்றனா்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் கோயிலில் தாக்குா் தரிசனம் செய்துவிட்டுப் புறப்பட்டாா். நூற்றுக்கணக்கான கட்சி நிா்வாகிகள் மற்றும் போது மக்கள்அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

தாக்குரின் சொந்த ஊரான சமீா்பூா் கிராமத்திலிருந்து ஹமிா்பூருக்கு சனிக்கிழமை புறப்பட்ட அவா், சுமாா் 35 கி.மீ. தூரம் கட்சித் தொண்டா்கள் மற்றும் உள்ளுா் மக்களுடன் இணைந்து மாபெரும் பேரணியை நடத்தினாா்.

ஹமிா்பூா் தொகுதியில் மக்களவைக்கு ஐந்தாவது முறையாக அனுராக் தாக்குா் போட்டியிடுகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தாக்குருக்கு எதிராக உனா தொகுதி முன்னாள் எம்எல்ஏ சத்பால் ரைசாடாவை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது.

ஹிமாசல பிரதேசத்தில் உள்ள நான்கு மக்களவைத் தொகுதிகளுக்கும், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து காலியாக உள்ள 6 பேரவை தொகுதிகளுக்கும் ஜூன் 1-ஆம் தேதி தோ்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com