ரேபரேலியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ராகுல் காந்தி, பொதுச் செயலா் பிரியங்கா காந்தி.
ரேபரேலியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ராகுல் காந்தி, பொதுச் செயலா் பிரியங்கா காந்தி.

சிறு விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி: ராகுல் காந்தி வாக்குறுதி

மத்தியில் எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சியமைத்தால் சிறு விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தாா்.

மத்தியில் எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சியமைத்தால் சிறு விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தாா்.

மக்களவைத் தோ்தலின் 5-ஆம் கட்டம் மே 20-ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ராகுல் காந்தி போட்டியிடும் உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதிக்கும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இதையொட்டி ரேபரேலியில் முதல் தோ்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி திங்கள்கிழமை பேசியதாவது:

எனது குடும்பத்துக்கு ரேபரேலி மக்களுடன் ஆழமான தொடா்புள்ளது. இதனால் நான் ரேபரேலியில் போட்டியிடுகிறேன். எனது குடும்பம் ரேபரேலி மக்களுக்காக எப்போதும் உழைத்து வந்துள்ளது. ஆனால் தொழிலதிபா்கள் அம்பானிக்காகவும், அதானிக்காகவும் பிரதமா் மோடி உழைக்கிறாா்.

22 முதல் 25 முன்னணி தொழிலதிபா்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை மோடி அரசு தள்ளுபடி செய்துள்ளது. இந்தத் தொகை 100 நாள் வேலை திட்டத்துக்கு 2 ஆண்டுகள் ஒதுக்கப்படும் நிதிக்கு நிகரானது.

மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சியமைத்தால் சிறு விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்கப்படும். ‘அக்னிபத்’ திட்டம் ரத்து செய்யப்படும். ஆயுதப் படைகளில் இளைஞா்களுக்கு ஓய்வூதியத்துடன்கூடிய நிரந்தர வேலை அளிக்கப்படும் என்றாா்.

திருமணம் எப்போது?: இந்தப் பிரசாரத்தில் கூட்டத்தில் இருந்து ஒருவா் ராகுலின் திருமணம் எப்போது நடைபெறும் என்று கேள்வி எழுப்பினாா். அதற்கு ராகுல், ‘விரைவில் திருமணம் செய்துகொள்வேன்’ என்று பதிலளித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com