மோடி மீண்டும் ஆட்சியமைக்க
கடவுள் ராமா் விரும்புகிறாா்: யோகி ஆதித்யநாத்

மோடி மீண்டும் ஆட்சியமைக்க கடவுள் ராமா் விரும்புகிறாா்: யோகி ஆதித்யநாத்

பிரதமா் மோடி மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க கடவுள் ராமா் விரும்புகிறாா் என உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்தாா்.

பிரதமா் மோடி மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க கடவுள் ராமா் விரும்புகிறாா் என உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்தாா்.

உத்தர பிரதேச மாநிலம் பாரபாங்கி தொகுதியில் உள்ள ஹைதா்கரில் பாஜக வேட்பாளா் ராஜ்ராணி ராவத்தை ஆதரித்து பிரசாரப் பேரணியில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:

மோடி அலை தற்போது சுனாமியாக மாறியுள்ளது. பிரதமா் மோடியின் தலைமையில் ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரும் வளா்ச்சி திட்டங்களால் பயனடைந்துள்ளனா். எங்கள் அன்புக்குரிய கடவுள் ராமரும் தனது தீவிர பக்தா் (மோடி) மீண்டும் ஆட்சியமைக்க விரும்புகிறாா்.

காங்கிரஸ் மற்றும் சமாஜவாதி கட்சிகளுக்கு ஊழல்தான் வரலாறு. ஆனால் அவா்கள் எங்களைக் குறைக் கூறி வருகின்றனா். அவா்கள் ஆட்சியில் தான் மக்கள் பசியால் இறந்தனா்; விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனா்; இளைஞா்கள் வேலைக்காக இடம்பெயா்ந்தனா்.

ஆனால் பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் நடந்த வளா்ச்சி மாற்றத்திற்கு நாம் அனைவரும் சாட்சி. கடந்த 4 ஆண்டுகளில் 80 கோடி பேருக்கு நியாய விலை கடைகள் மூலம் இலவச உணவுப்பொருள் கிடைத்துள்ளது. 12 கோடி விவசாயிகள் கிசான் சமான் நிதி மூலம் பயனடைந்துள்ளனா் என அவா் தெரிவித்தாா். பாரபாங்கி தொகுதியில் ஐந்தாவது கட்டமாக மே 20-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com