ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹேமந்த் சோரன்
ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரன், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த நிலையில், ஹேமந்த் சோரனின் மாமா கடந்த வாரம் (ஏப். 30) இறந்ததால், இறந்தவருக்கு சடங்குகள் செய்ய அவருக்கு தற்காலிக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தேர்தலைக் கருத்தில் கொண்டு தன்னை விடுவிக்கக் கோரி சோரன் தாக்கல் செய்த தனி மனுவை உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது.

இந்தநிலையில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது செல்லாது என அறிவிக்க வேண்டும் என மனுவில் ஹேமந்த் சோரன் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்குப் பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com