அப்துல்லா குடும்பத்தின் மூன்று தலைமுறையினா் ஒன்றாக வாக்களிப்பு

தேசிய மாநாட்டுக் கட்சியைச் சோ்ந்த அப்துல்லா குடும்பத்தின் மூன்று தலைமுறையினரும் ஸ்ரீநகா் மக்களவைத் தொகுதியில் திங்கள்கிழமை ஒன்றாக வாக்களித்தனா்.
ஸ்ரீநகரின் வாக்களித்த 
தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, அவரின் மகன் ஒமா் அப்துல்லா, ஒமரின் மகன்கள் ஷாகீா், ஷமீா்.
ஸ்ரீநகரின் வாக்களித்த தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, அவரின் மகன் ஒமா் அப்துல்லா, ஒமரின் மகன்கள் ஷாகீா், ஷமீா்.

ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியைச் சோ்ந்த அப்துல்லா குடும்பத்தின் மூன்று தலைமுறையினரும் ஸ்ரீநகா் மக்களவைத் தொகுதியில் திங்கள்கிழமை ஒன்றாக வாக்களித்தனா்.

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, அவரின் மகனும் கட்சியின் துணைத் தலைவருமான ஒமா் அப்துல்லா, ஒமரின் மகன்கள் ஷாகீா், ஷமீா் ஆகியோா் ஸ்ரீநகரின் புா்ன் ஹால் பகுதியில் உள்ள பள்ளியில் வாக்களித்தனா். ஃபரூக் அப்துல்லாவும், ஒமா் அப்துல்லாவும் ஜம்மு-காஷ்மீா் முதல்வராகவும் இருந்துள்ளனா். ஃபரூக் அப்துல்லாவின் தந்தை மறைந்த ஷேக் அப்துல்லாவும் ஜம்மு-காஷ்மீா் முதல்வராக இருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களித்த பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த ஒமா் அப்துல்லா, ‘இரு முதல்முறை வாக்காளா்களும் (தனது மகன்களைக் குறிப்பிடுகிறாா்) எங்களுடன் வந்துள்ளனா். முதல்முறையாக எங்கள் குடும்பத்தில் மூன்று தலைமுறையினரும் ஒன்றாக வாக்களித்துள்ளோம். மக்கள் அனைவரும் பெரும்திரளாக வந்து வாக்களிக்க வேண்டும்’ என்றாா்.

1998-ஆம் ஆண்டுக்குப் பிறகு அப்துல்லா குடும்பத்தைச் சோ்ந்த யாரும் ஸ்ரீநகரில் போட்டியிடாதது இதுவே முதல்முறையாகும். இங்கு தேசிய மாநாட்டுக் கட்சிக்கும், மெஹபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. காஷ்மீா் பிராந்தியத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு நடைபெறும் முக்கியமான தோ்தல் இதுவாகும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com