சண்டீகரில் மணீஷ் திவாரி வேட்புமனு தாக்கல்!

காங்கிரஸ் வேட்பாளர் மணீஷ் திவாரி வேட்புமனு தாக்கல் செய்தார்.
சண்டீகரில் மணீஷ் திவாரி வேட்புமனு தாக்கல்!

சண்டீகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மணீஷ் திவாரி வேட்புமனு தாக்கல் செய்தார்.

அவருடன் சண்டீகர் பிரிவு காங்கிரஸ் தலைவர் எச்.எஸ்லக்கி மற்றும் பிற தலைவர்கள் இருந்தனர்.

யூனியன் பிரதேசத்தில் உள்ள ஒரே மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் சஞ்சய் டாண்டனை எதிர்த்து திவாரி போட்டியிடுகிறார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,

நமது ஜனநாயகத்தை காப்பற்றவும், நமது நகரத்தை அழகாக்கவும் உங்களின் ஆசீர்வாதமும், ஆதரவையும் கோருகிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

வேட்புமனு தாக்களுக்கு முன், திவாரி சண்டீகரில் பேரணியில் ஈடுபட்டார். இதில் ஏராளமான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் இணைந்தனர்.

இந்த தொகுதியில் பாஜகவின் சார்பில் கிரோன் கெர் களம் இறக்கப்பட்டுள்ளது.

ஒரே கட்டமாக சண்டீகர் தொகுதிக்கு ஜூன் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com