சிறையிலிருந்து வெளியே வந்தார் எச்.டி.ரேவண்ணா

சிறையிலிருந்து வெளியே வந்தார் எச்.டி.ரேவண்ணா
சிறையிலிருந்து வெளியே வந்தார் எச்.டி.ரேவண்ணா
-

பெண் கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட மஜத எம்எல்ஏ-வும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து அவர் இன்று சிறையிலிருந்து வெளியே வந்தார்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த எச்.டி. ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்கி மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இன்று அவர் பிணையில் வெளியே வந்தார்.

மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தையும் எம்எல்ஏ-வுமான எச்.டி.ரேவண்ணா ஆகியோரால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட தனது தாய் கடத்தப்பட்டதாக அவரது மகன் புகாா் அளித்திருந்தாா். அதன்பேரில், எச்.டி.ரேவண்ணா மீது பெண்ணைக் கடத்தியது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் எச்.டி.ரேவண்ணா, அவரது கூட்டாளியான சதீஷ்பாபு ஆகியோரை சிறப்புப் புலனாய்வுப் படை (எஸ்.ஐ.டி.) மே 4-ஆம் தேதி கைது செய்து விசாரித்து வந்தது.

இதனிடையே, எச்.டி.ரேவண்ணாவை மே 14-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, எச்.டி.ரேவண்ணா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், பெண் கடத்தல் வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி எச்.டி.ரேவண்ணா தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் மே 9-ஆம் தேதி நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை மே 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதன்படி, ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.

அதில், எச்.டி.ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்க சிறப்புப் புலனாய்வுக் குழு ஆட்சேபம் தெரிவித்தது. இந்நிலையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சந்தோஷ் கஜனான, எச்.டி.ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ரூ. 5 லட்சம் பிணைத் தொகையில், வழக்கின் சாட்சியங்களை கலைக்கக் கூடாது, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கப்பட்டது.

இதனால், கடந்த 9 நாள்களாக சிறையில் இருந்த எச்.டி.ரேவண்ணா, நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். எச்.டி.ரேவண்ணா இன்று முற்பகலில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com