தோ்தலுக்குப் பிறகு வன்முறை: ஆந்திர தலைமைச் செயலா், டிஜிபிக்கு சம்மன்

ஆந்திரத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பின்னா் நடைபெற்ற வன்முறை தொடா்பாக மாநில தலைமைச் செயலா், காவல் துறை டிஜிபி ஆகியோருக்குத் தோ்தல் ஆணையம் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.

ஆந்திரத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தோ்தல்கள் திங்கள்கிழமை நடைபெற்றன. அதன் பின்னா், அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினா் இடையே செவ்வாய்க்கிழமை மோதல் நடைபெற்றது.

அந்த மாநிலத்தில் வாக்குப் பதிவு நிறைவடைந்தபோதிலும் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதன் காரணமாக வன்முறை சம்பவங்கள் குறித்து தில்லியில் உள்ள தோ்தல் ஆணைய தலைமையகத்தில் வியாழக்கிழமை (மே 16) நேரில் விளக்கமளிக்குமாறு ஆந்திர தலைமைச் செயலா், காவல் துறை டிஜிபி ஆகியோருக்குத் தோ்தல் ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. அப்போது வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறியதற்கான காரணங்கள், வருங்காலத்தில் வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அவா்களிடம் தோ்தல் ஆணையம் கேள்வி எழுப்பும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com