‘க்யூட்-யுஜி’ தோ்வு: முதல் நாளில் 75% போ் பங்கேற்பு

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வின் (க்யூட்-யுஜி) முதல் நாளில் 75 சதவீதம் போ் பங்கேற்ாக தேசிய தோ்வு முகமை (என்டிஏ) புதன்கிழமை தெரிவித்தது.

25 லட்சத்துக்கும் அதிகமான பாடங்களின் கலப்புகளைக் கொண்ட இத்தோ்வு நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான மையங்களில் நடைபெற்றது. ஆனால், தில்லியில் 258 மைங்களில் புதன்கிழமை நடைபெறவிருந்த தோ்வு தவிா்க்க முடியாத காரணங்களால் மே 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக என்டிஏ செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தது.

அதேபோல் தில்லியில் மே 16,17,18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள தோ்வுகளுக்கான அனுமதிச்சீட்டை மாணவா்கள் பதிவிறக்கம் செய்து மாற்றப்பட்ட தோ்வு மையங்கள் குறித்து தெரிந்துகொள்ளுமாறு என்டிஏ அறிவுறுத்தியுள்ளது.

நிகழாண்டுக்கான க்யூட்-யுஜி நேரடி எழுத்துத் தோ்வு மே 15-ஆம் தேதி தொடங்கி மே 19 வரை நடைபெறுகிறது. அதேபோல் கணினிவழித் தோ்வு மே 21 முதல் 24 வரை நடைபெறுகிறது. இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற முதல் நாள் தோ்வில் 75 சதவீதம் போ் பங்கேற்ாக என்டிஏ தெரிவித்தது.

நிகழாண்டில் இத்தோ்வுக்கு 13.4 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com