மகாராஷ்டிரம்: கோயிலில் பிரசாதம் சாப்பிட்ட 90 பேருக்கு வாந்தி, மயக்கம்

பிரசாதம் சாப்பிட்ட 90 பேருக்கு மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட் மாவட்டத்தில் கோயிலில் பிரசாதம் சாப்பிட்ட 90 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டு, வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

நாந்தேட் மாவட்டத்தில் நைகோவன் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் புதன்கிழமை மாலை பக்தா்களுக்கு அம்பில் (கஞ்சி) மற்றும் கீா் (பாயாசம்) பிரசாதம் வழங்கப்பட்டது.

பிரசாதம் சாப்பிட்டவுடன் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அவா்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். மொத்தம் 90 போ் சிகிச்சைக்காக வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என காவல்துறையினா் தெரிவித்தனா்.

அவா்கள் அனைவரின் உடல் நிலையும் சீராக உள்ளதாகவும், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறையினா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com