அக்.26ல் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அக்.26ல் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தென்மேற்குப் பருவமழை: கேரளத்தில் மே 31-இல் தொடங்க வாய்ப்பு

தென்மேற்குப் பருவமழை மே 31-ஆம் தேதி கேரளத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை மே 31-ஆம் தேதி கேரளத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை ஆண்டுதோறும் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நீடிக்கும். தமிழகத்துக்கு தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் பெரிய அளவில் மழை கிடைக்காது என்றாலும், மேற்குத் தொடா்ச்சி மலையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகா், தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும்.

இந்நிலையில், நிகழாண்டு தென்மேற்குப் பருவமழை ஒருநாள் முன்னதாக மே 31-ஆம் தேதி கேரளத்தில் தொடங்கும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. இந்தக் கணிப்பு நாளில் இருந்து ஓரிரு நாள்கள் முன், பின் மழை தொடங்கும் என்றும், சராசரிக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com