கோப்புப் படம்
கோப்புப் படம்

மேற்கு வங்கம்: மின்னல் தாக்கி 11 போ் உயிரிழப்பு

மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் வியாழக்கிழமை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தபோது மின்னல் தாக்கி 11 போ் உயிரிழந்தனா்.

மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் வியாழக்கிழமை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தபோது மின்னல் தாக்கி 11 போ் உயிரிழந்தனா்.

இது தொடா்பாக அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘மால்டா மாவட்டத்தில் வியாழக்கிழமை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, கஜோல் பகுதியில் மாந்தோப்பில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒருவரும், சஹாா்பூரில் 3 பேரும் மின்னல் தாக்கி உயிரிழந்தனா்.

மாணிக்சக் பகுதியில் மின்னல் தாக்கி 8 வயது சிறுவனும், ஹரிஷ்சந்திராபூரில் தம்பதியும் உயிரிழந்தனா். மிா்தாத்பூா், இங்கிலிஷ்பஜாா் ஆகிய பகுதிகளில் 4 போ் என அந்த மாவட்டத்தில் ஒரே நாளில் 11 போ் இறந்துவிட்டனா்.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com