2024-இல் நிச்சயம் இந்தியா கூட்டணி ஆட்சி தான்! -அகிலேஷ் யாதவ்

2024-இல் நிச்சயம் இந்தியா கூட்டணி ஆட்சி தான்! -அகிலேஷ் யாதவ்
படம் | பிடிஐ

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று, நிச்சயமாக ‘இந்தியா’ கூட்டணி ஆட்சியமைக்கும் என்று சமாஜவாதி கட்சித் தலைவரும் உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

இன்று (மே 20) செய்தியாளர்களுடன் பேசிய அகிலேஷ் யாதவ், இந்திய அரசமைப்பை பாதுகபதற்காக ‘இந்தியா’ கூட்டணிக்கு உதவ மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி உதவ வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், பாஜகவுக்கு 140 தொகுதிகள் கூட வெற்றி கிடைக்காத நிலையை மக்கள் அவர்களுக்கு ஏற்படுத்துவார்கள் என்றும், 400க்கும் அதிகமான இடங்களில் பாஜக வீழ்த்தப்படும் என்று பேசினார்.

’இந்தியா’ கூட்டணி ஆட்சியமைந்ததும், மக்களுக்கு இலவச இணையதள சேவை (டேட்டா) வழங்கப்படுமென்பதையும் இன்றைய பிரசாரத்தில் அவர் வாக்குறுதியளித்துள்ளார். இணையதள சேவை வழங்குவதன் மூலம் மக்கள் பொது அறிவை வளர்த்துக்கொள்ள உதவியாக இருக்குமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com