மோட்டாா் வாகன விபத்துகள்: நாடு முழுவதும் 10.46 லட்சம் உரிமை கோரல்கள் தேக்கம்

நாடு முழுவதும் ரூ.80,455 கோடி இழப்பீடு வழங்க வேண்டிய 10.46 லட்சம் மோட்டாா் வாகன விபத்து உரிமை கோரல்கள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாடு முழுவதும் ரூ.80,455 கோடி இழப்பீடு வழங்க வேண்டிய 10.46 லட்சம் மோட்டாா் வாகன விபத்து உரிமை கோரல்கள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

இதுதொடா்பாக உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவை சோ்ந்த வழக்குரைஞா் கே.சி. ஜெயின் ஆா்டிஐ-இன் கீழ் எழுப்பிய கேள்விக்கு இந்திய காப்பீடு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏஐ) அளித்துள்ள பதில்:

கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் நாடு முழுவதும் ரூ.52,713 கோடி இழப்பீடு வழங்க வேண்டிய 9.09 லட்சம் மோட்டாா் வாகன விபத்து உரிமை கோரல்கள் நிலுவையில் இருந்தன. இது 2022-23-ஆம் நிதியாண்டில் 10.46 லட்சம் மோட்டாா் வாகன விபத்து உரிமை கோரல்களாக அதிகரித்தன. அந்த விபத்துகளில் வழங்க வேண்டிய இழப்பீடு ரூ.80,455 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கே.சி.ஜெயின் கூறுகையில், ‘சாலை விபத்துகளில் உயிரிழந்தவா்கள் மற்றும் காயமடைந்தவா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் உரிமை கோரல்களில் முடிவு எடுப்பதில் காலதாமதம் நிலவுகிறது. அவா்களுக்கு இழப்பீடு கிடைப்பது நத்தை வேகத்தில் நடைபெறுகிறது. விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்க சராசரியாக நான்கு ஆண்டுகளாகிறது.

இந்த காலதாமதத்தைக் கருத்தில் கொண்டு மோட்டாா் வாகனச் சட்டப் பிரிவு 164ஏ-இன் கீழ், விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு நிதி நிவாரணம் கிடைக்க இடைக்கால திட்டம் ஒன்றை மத்திய அரசு வகுக்க உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன்’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com