பாஜக தேசிய செயலரை கைது செய்து மகளை விடுவிக்க முயற்சி

ஹைதராபாத்: பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) எம்எல்ஏக்களை பாஜகவில் இணையக் கோரி பேரம் பேசிய விவகாரத்தில் அக்கட்சியின் தேசிய செயலரை கைது செய்து மகள் கவிதாவுக்கு எதிரான வழக்கை திரும்பப்பெற பாஜகவுக்கு தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் அழுத்தம் கொடுக்க முயன்றதாக முன்னாள் காவல்துறை துணை ஆணையர் பி.ராதாகிருஷ்ண ராவ் தெரிவித்தார்.

தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் பி.ராதாகிருஷ்ண ராவ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பிஆர்எஸ் கட்சியின் எம்எல்ஏக்களை பேரம் பேசி பாஜகவில் இணைக்க அக்கட்சியின் தேசிய செயலரான சந்தோஷ் முயற்சி செய்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) ஒன்று அமைக்கப்பட்டது. சந்தோஷை கைது செய்து தன் மகளும் பிஆர்எஸ் எம்எல்சியுமான கவிதா மீதான அமலாக்கத்துறை வழக்கை திரும்பப்பெறவைக்க பாஜகவுக்கு அழுத்தம் கொடுக்க அப்போதைய முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் முயன்றார். இந்நிலையில் சில காவல்துறை அதிகாரிகளின் திறமையின்மை காரணமாக இந்த வழக்கிலிருந்து ஒரு முக்கிய நபர் தப்பித்தார். அதன்பின்பு இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சந்தோஷை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டது. மேலும் எஸ்ஐடியிடமிருந்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

கொடுத்த பணியை சரியாக முடிக்காததால் சந்திரசேகர் ராவ் மிகவும் கோபத்துடன் காணப்பபட்டார் என தெரிவித்தார்.

தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் ஆட்சியின்போது முக்கியப் பிரமுகர்களின் தொலைபேசியை ஒட்டுகேட்டல் மற்றும் கணினியில் உள்ள தரவுகளை அழித்த விவகாரம் தொடர்பாக ராதாகிருஷ்ண ராவ் கடந்த மார்ச் மாதம் ஹைதராபாத் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com