மும்பை: தாராவியில் பெரும் தீ விபத்து - 6 பேர் காயங்களுடன் மீட்பு

தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் தாராவி பகுதியில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மும்பை: தாராவியில் பெரும் தீ விபத்து - 6 பேர் காயங்களுடன் மீட்பு
கோப்புப்படம்

மும்பையில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் தாராவி பகுதியில் இன்று(மே 28) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

காலா கைலா பகுதியில் அமைந்துள்ள அசோக் மில் காம்பவுண்டில் உள்ள ஜவுளி தொழில் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு அடுக்குமாடிக் கட்டடத்தில் அதிகாலை 3.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அருகிலிருந்த கட்டடங்களுக்கும் தீ பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த கோர தீ விபத்தில் கட்டடத்தின் உள்ளே சிக்கிக்கொண்டவர்களில் 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com