பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச காணொலிகளை பரப்பியதாக இருவர் கைது

பெங்களூரு: கர்நாடகத்தைச் சேர்ந்த மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச காணொலிகளைப் பரப்பியதாக 2 பேரை சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது.

மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கட்சி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச காணொலிகளை பொது வெளியில் பரப்பியது தொடர்பாக 2 பேரை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

பெங்களூரில் உள்ள உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வந்தபோது இருவரையும் எஸ்.ஐ.டி. அதிகாரிகள் கைது செய்தனர். பாலியல் ரீதியாக பெண்களை துன்புறுத்தி, அவற்றை ஆபாச காணொலிகளாக பிரஜ்வல் ரேவண்ணா பதிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் காணொலிகள் அடங்கிய பென்டிரைவ்களை பொது வெளியில் பரப்பியது தொடர்பாக இருவரையும் கைது செய்துள்ளதாக எஸ்.ஐ.டி. தெரிவித்துள்ளது.

பாலியல் வழக்கில் சிக்கி, வெளிநாட்டில் பதுங்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா வரும் மே 31ஆம் தேதி நாடு திரும்பி எஸ்.ஐ.டி. விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக காணொலி ஒன்றில் தெரிவித்துள்ளார். அவரது வருகைக்குப் பிறகு, இந்த வழக்கு மேலும் சூடுபிடிக்கும் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com